வழிகாட்டுதல் நிகழ்ச்சி

ராஜபாளையம்; ராஜபாளையம் ஸ்ரீ ரமண வித்யாலயா பதின்ம மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கல்லுாரி படிப்பிற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி ஆலோசகர் டாக்டர் கு.கணேசன் தலைமை வகித்தார். மாணவி ஸ்ரீஜா வரவேற்றார். சென்னை ராமச்சந்திரா பல்கலை. பொறியியல் கல்லுாரி பேராசிரியர் கார்த்திகேயன் மாணவர்களுக்கு அதிக வாய்ப்புள்ள கல்லுாரிகள் விவரம், படிப்புகள், தேர்வு செய்வது, எதிர்கால வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட தலைப்புகளில் பேசினார்.

மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவி நவ்யா நிகழ்ச்சியை தொகுத்தார். மாணவி தீபிகா நன்றி கூறினார். பள்ளி முதல்வர் சுதா நிர்வாக அலுவலர் ராமராஜ் தலைமையில் ஆசிரியர்கள், அலுவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement