கஞ்சா பதுக்கிய முதியவர் கைது

கடமலைக்குண்டு; வருஷநாடு அருகே போலீசார் ரோந்து சென்றனர். அல்லால் ஓடை பாலம் அருகே சந்தேகப்படும்படி நின்றவரை பிடித்து விசாரித்ததில் அவரிடம் 130 கிராம் கஞ்சா இருந்துள்ளது. விசாரணையில் அவர் சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த குட்ட வேல் தேவர் 88, கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது.அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல்செய்தனர்.

Advertisement