மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது உடற்கூறு பரிசோதனை அறிக்கையால் அம்பலம்
காங்கேயம்::
காங்கேயம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கொன்று நாடகமாடிய கணவன், உடற்கூறு அறிக்கையால் சிக்கினார்.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே கொழுமங்குழி, ஓரம்புதுார் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜின் மூன்றாவது மகள் கவிதா, 36; காங்கேயத்தில் ஒரு எலக்ட்ரிக் கடையில் பணிபுரிந்தார். முத்துார் அருகேயுள்ள தண்ணீர்பந்தலை சேர்ந்த தங்கவேல் மகன் ஆனந்தன், 43; கட்டட தொழிலாளி. இருவருக்கும், 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
தம்பதிக்கு எட்டு வயதில் மகன் உள்ளார். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால் சில ஆண்டுகளாக குடும்பத்துடன், காங்கேயம் அருகே நத்தக்காடையூர், வெள்ளியம்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்தார். கிடைக்கும் வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த, 26ம் தேதி இரவு தகராறு ஏற்பட்ட நிலையில், ௨௭ம் தேதி அதிகாலை, உறங்கி கொண்டிருந்த கவிதாவின் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். காலையில் மகன் எழுந்து, அம்மாவை கேட்டு அழுதபோது, மனைவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக நாடகமாடினார்.
இதையறிந்து வந்த கவிதாவின் உறவினர்கள், காங்கேயத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
கவிதாவின் கழுத்தில் காயங்கள் இருந்ததால், காங்கே
யம் போலீசார், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பினர். இதனிடையே பிரேத பரிசோதனை முடிந்து, சடலத்தை பெற்ற ஆனந்தன், இறுதிச்சடங்கு செய்து உறவினர்களிடம் நாடகமாடி வந்தார்.உடற்கூறு பரிசோதனையில் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததால், காங்கேயம் போலீசார் ஆனந்தனை பிடித்து விசாரித்தனர். இதில் மனைவியை கொன்றதை ஒப்புக்கொள்ளவே, அவரை நேற்று கைது செய்தனர். காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
நாய் கடித்து புள்ளிமான் பலி
-
மரம் ஏறும் தொழிலாளி கொலை; வாலிபரை வெட்டி டூவீலர் எரிப்பு
-
பகிர்மான குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகும் அவலம்; வாரியம், உள்ளாட்சி இணைந்து சீரமையுங்கள்
-
தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் வேட்பாளர்களை தேர்வு செய்யலாமா? சுப்ரீம் கோர்ட் சந்தேகம்
-
தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
-
பழனிசாமி சீட்டில் விஜயபாஸ்கர் 'கமென்ட்' அடித்த துரைமுருகன்