பழனிசாமி சீட்டில் விஜயபாஸ்கர் 'கமென்ட்' அடித்த துரைமுருகன்

சென்னை: சட்டசபையில் நேற்று, சட்டசபை குழு தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சபாநாயகர் அப்பாவு பேச வாய்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அமரும் இருக்கைக்கு வந்து, விராலிமலை தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர், முதல்வருக்கு எதிரே கம்பீரமாக அமர்ந்தார்.

எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமாருடன், உற்சாகமாக அவர் பேசத் துவங்கினார். இதை, எதிரில் அமர்ந்திருந்த அமைச்சர் துரைமுருகன் கவனித்தபடி இருந்தார்.

பின், விஜயபாஸ்கரை பார்த்து, சிரித்தபடியே ஏதோ, 'கமென்ட்' அடித்தார். சுதாரித்த விஜயபாஸ்கர் வேகமாக எழுந்து, சபாநாயகர் அப்பாவு அருகில் சென்றார்.

தன் கட்சியை சேர்ந்த ஓ.எஸ்.மணியனுக்கு வாய்ப்பு வழங்குமாறு கூறினார்.

அந்த நேரத்தில், ஓ.எஸ்.மணியன் பேசத் துவங்கி விட்டதை, சபாநாயகர் சுட்டிக்காட்ட, அவசரமாக சபையில் இருந்து வெளியேறினார் விஜயபாஸ்கர்.

Advertisement