கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் சிக்கினார்
டி.என்.பாளையம்::
பங்களாப்புதுார் எஸ்.ஐ., பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார், டி.என்.பாளையத்தில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். டி.என்.பாளையம், காமராஜர் நகரை சேர்ந்த பெரியசாமி, 42, என்பது தெரிந்தது. அவரிடம், ௮௦ கிராம் கஞ்சா இருந்தது. கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement