வாகன வியாபாரிகள் கோபியில் ஆர்ப்பாட்டம்
கோபி::
வட்டார போக்குவரத்து துறை புதிய சட்டத்தின் படி, ஆர்.சி., புத்தகத்தை தபாலில் வழங்குவதை ரத்து செய்து, பழைய சட்டத்தின்படி, ஆர்.சி., புத்தகத்தை நேரில் வழங்க வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட அனைத்து மோட்டார் வாகன வியாபாரிகள் சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோபியில் நேற்று நடந்தது. தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர் சிவா முன்னிலை வகித்தார். கோபி, பவானி, சத்தி, நம்பியூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஈரோட்டில் 102 டிகிரி வெயில்
ஈரோடு::
ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் காலை, 7:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை கடுமையான வெயில் வாட்டியது. மதியம், 12:30 மணிக்கு மேல் சிறிது நேரம் சில இடங்களில் மட்டும் மேகமூட்டமாக காணப்பட்டாலும், வெப்பமான சூழலே நிலவியது. மாலை, 5:00 மணிக்கு முன்னதாக உள்ள, 24 மணி நேரத்தில், 102 டிகிரி வெயில் வாட்டியது. பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், 0.2 முதல், 3.7 டிகிரி வெயில் கூடுதலாக வாட்டியது.
மேலும்
-
இந்திய பொருளாதாரம் 3ம் இடத்திற்கு முன்னேறும்: தேசிய புள்ளியியல் திட்ட அமைச்சகம் தகவல்
-
அவனியாபுரம் கோயில் கொடியேற்றம்
-
மாடக்குளம், சிந்தாமணி போலீஸ் ஸ்டேஷன்கள்; 'தினமலர்' செய்தி எதிரொலியாக முதல்வர் அறிவிப்பு
-
நீரில் மூழ்கி எலக்ட்ரீசியன் பலி
-
மே 2 முதல் மடீட்சியா கண்காட்சி
-
டூவீலர் மீது வாகனம் மோதி ஒருவர் பலி