அவனியாபுரம் கோயில் கொடியேற்றம்
அவனியாபுரம்; மதுரை அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடந்தது.
நேற்று காலை உற்ஸவர்கள், மூலவர்களுக்கு சிறப்பு பூஜை முடிந்து, கல்யாண சுந்தரேஸ்வரர், பிரியாவிடை, பால மீனாம்பிகை கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். பூஜை முடிந்து கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடந்தது.
திருவிழா நடைபெறும் மே 8 வரை தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக மே 6ல் பால மீனாம்பிகை அம்பாளுக்கு பட்டாபிஷேகம், மே 7ல் திக்கு விஜயம் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, மே 8 காலை 8:35 முதல் 8:59 மணிக்குள் கல்யாண சுந்தரேஸ்வரர், பாலமீனாம்பிகை அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு கல்யாண சுந்தரேஸ்வரர் யானை வாகனத்திலும், பாலமீனாம்பிகை அம்பாள் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர்.
மேலும்
-
36 மணி நேரத்திற்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அலறும் பாக்., அமைச்சர்
-
பெற்றோர் அறிவுரை: வாலிபர் தற்கொலை
-
2 குழந்தையுடன் மாயமான தந்தை 13 நாளுக்கு பின் சடலங்கள் மீட்பு
-
சித்தராமையா கோபம் பா.ஜ., கடும் தாக்கு
-
மாநகராட்சி பெண் ஊழியர் லாரி மோதி பலி
-
'மாஜி' அமைச்சர் மீதான வழக்கில் உத்தரவை மாற்ற முடியாது: நீதிபதி திட்டவட்டம்