பச்சைமலை முருகன் கோவிலில் விசாரணை


கோபி::

கோபி அருகே பிரசித்தி பெற்ற, பச்சைமலை முருகன் கோவிலுக்கு, திருச்சி மாவட்ட அறநிலையத்துறை துணை கமிஷனர் சரவணன் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.ஐ., ஒருவர் அடங்கிய குழுவினர் நேற்று காலை வந்தனர்.

கோவிலில் பணியாற்றிய முன்னாள் செயல் அலுவலர் கனகராஜ் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்துள்ளது. 'பச்சைமலை முருகன் கோவிலுக்கு தங்கத்தேர் செய்தது சம்பந்தமாக, 2007ல் புகார் எழுந்தது. இதனால் அப்போது பணியில் இருந்த செயல் அலுவலரிடம் விசாரணை நடந்தது' என்று, கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement