காஷ்மீரில் ஹிந்துக்கள் படுகொலை; இது தேச அவமானம்; ஹிந்து மகா சபை

துாத்துக்குடி: பயங்கரவாதத்தில் மதம் பார்க்கக் கூடாது, யார் செய்தாலும் அப்புறப்படுத்த வேண்டும் என அகில பாரத ஹிந்து மகா சபா தேசிய தலைவர் சுவாமி சக்கரபாணி மகராஜ் தெரிவித்தார்.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அவர் அளித்த பேட்டி:



பாகிஸ்தான் ஆதரவுடன் இயங்கும் பயங்கரவாதிகள், காஷ்மீரில் ஹிந்துக்களை குறிவைத்து தாக்கி உள்ளனர். இது தேசத்துக்கு அவமானம். பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில், அரசு தரப்பு இரக்கம் பார்க்க வேண்டியதில்லை.

இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பயங்கரவாதத்தை முறியடிக்கும் மத்திய அரசின் செயல்பாடு களுக்கு ஹிந்து மகா சபா உறுதுணையாக இருக்கும்.

பயங்கரவாதிகள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக, கோவில் கோவிலாக சென்று இறைவனிடம் வேண்டுகிறோம். இந்த நேரத்தில், பெரும்பான்மை மக்களாக இருக்கும் ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். கோவில் நகரங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் கவனமாக இருக்க வேண்டும்.

இந்தியா விரைவில் ஹிந்து நாடாக அறிவிக்கப்பட வேண்டும். ஹிந்து ராஷ்டிரம் உருவாக்கப்பட வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement