கார் மோதி பாட்டி, பேரன் பரிதாப பலி

செங்கம் : சாலையை கடக்க முயன்ற பாட்டி, பேரன் கார் மோதி பரிதாபமாக பலியாகினர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தானகவுண்டன் புதுாரைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி சித்ரா, 61. இவரது பேரன் ஜஸ்வந்த், 5. நேற்று காலை 10:00 மணியளவில் சித்ரா, ௧௦௦ நாள் வேலைக்கு புறப்பட்டார். பள்ளி விடுமுறை என்பதால், பேரன் ஜஸ்வந்த்தை உடன் அழைத்துச் சென்றார்.

திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, திருவண்ணாமலையிலிருந்து ஓசூர் நோக்கிச் சென்ற, 'மாருதி ஸ்விப்ட்' கார், சித்ரா, ஜஸ்வந்த் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவர்கள், சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பாச்சல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement