காய்கறி மார்க்கெட் முன் கழிவுநீர் தேக்கம்; நிரந்தர தீர்வுக்கு வழி காணுங்க
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் அருகே ரோட்டில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி அருகே காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மார்க்கெட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர், மழை நீர், டீக்கடை, ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நங்காஞ்சி ஆற்றுக்கு செல்கிறது.
கழிவு நீரால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதோடு கிணறுகளில் தண்ணீர் நிறம் மாறி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் என அப்பகுதியை சேர்ந்த விவசாயி கழிவு நீர் செல்லும் பாதையை அடைத்து விட்டார். இதனால் ரோட்டின் இரண்டு பக்கமும் கழிவு நீர் தேங்கி உள்ளது.
தேங்கிய கழிவு நீர் அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. கழிவு நீரால் இப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
மேலும்
-
36 மணி நேரத்திற்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அலறும் பாக்., அமைச்சர்
-
பெற்றோர் அறிவுரை: வாலிபர் தற்கொலை
-
அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்க போறீங்களா? இன்றைய நிலவரம் இதோ!
-
2 குழந்தையுடன் மாயமான தந்தை 13 நாளுக்கு பின் சடலங்கள் மீட்பு
-
சித்தராமையா கோபம் பா.ஜ., கடும் தாக்கு
-
மாநகராட்சி பெண் ஊழியர் லாரி மோதி பலி