சிவகாசி ஊராட்சிகளில் நாய்கள் அட்டகாசம்

சிவகாசி; சிவகாசி அருகே பள்ளப்பட்டி, நாரணாபுரம் ஊராட்சி பகுதியில் அதிக அளவிலான நாய்கள் நடமாட்டத்தால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

சிவகாசி அருகே நாரணாபுரம் ரோடு 56 வீட்டு காலனியில் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் நாய்கள் நடமாடுகின்றன. இவைகள் ஒரு சில வெறி பிடித்து தெருவில் போவோர் வருவோரை கடித்து துன்புறுத்துகின்றது. டூவீலர்களில் செல்பவர்களை விரட்டும்போது அவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். மொத்தமாக ரோட்டில் நாய்கள் திரிவதால் விலகிச் செல்லவும் வழியில்லை. ஒரு மாதத்தில் மட்டும் 49 பேர் நாயக்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தவிர பள்ளபட்டி ஊராட்சி உசேன் காலனி, சிலோன் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாய்கள் தொல்லையால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஆனால் வீட்டின் அருகிலும் தெருவிலும் விளையாடும் சிறுவர்களை தடுக்கவும், தவிர்க்கவும் முடியாது. எனவே நாய் கடித்த பின்பு சிகிச்சை அளிப்பதை விட, நாய் கடிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement