திருநெல்வேலி பீடி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை

திருநெல்வேலி : திருநெல்வேலி டவுனில் 20 ஆண்டுகளுக்கு மேலாக காஜா பீடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 200 க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பீடி கேரளாவில் அதிகமாக விற்பனையாகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் 12:15 மணிக்கு இங்கு 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடந்தது.
கதவுகள் மூடப்பட்டு யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. முதற்கட்டமாக 8 அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனை எதற்காக, ஆவணங்கள் பறிமுதல் செய்த விபரம் குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் இருந்து கடத்தல்; ரூ.9.6 கோடி கஞ்சாவை பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை
-
தே.மு.தி.க. பொறுப்புகளில் திடீர் மாற்றம்: பெயர் மாறி இளைஞரணி செயலாளரான விஜய பிரபாகர்
-
சரக்குகளை விரைந்து கையாளும் திட்டம்; ஓசூர், மதுரையில் செயல்படுத்த ஆய்வு
-
எண்கள் சொல்லும் செய்தி
-
'பேட்டியா கண்காட்சி' மே 2ம் தேதி துவக்கம்
-
மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 33 மாதங்களில் இல்லாத உயர்வு
Advertisement
Advertisement