சத்துணவு உதவியாளர் பணி; ஆளும்கட்சி தலையீடு

மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 320 சமையல் உதவியாளர் பணிகள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாவட்டத்தில் சத்துணவு பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப அந்தந்த ஒன்றியங்களில் ஆளுங்கட்சியினர் தரப்பில் வேலை வாங்கி வருவதாக 4 முதல் 6 லட்சம் ரூபாய் வரை பணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.ஆளும் கட்சி நிர்வாகிகள் ஒன்றிய அலுவலகத்தில் முகாமிட்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுகின்றனர். அதிகாரிகளும் ஆளுக்கட்சியினருக்கு பயந்து செய்வதறியாமல் உள்ளனர்.

சத்துணவு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாகும். அளுங்கட்சியினரிடம் வேலைக்காக பணம் கொடுக்காத பலர் தங்களுக்கு பணி கிடைக்குமா என சந்தேகத்துடன் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தனர்.

Advertisement