பெண் தற்கொலை; ஆர்.டி.ஓ., விசாரணை
குள்ளஞ்சாவடி; வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்
பண்ருட்டி தாலுகா, பத்திரக்கோட்டையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகள் ரோஷினி,25; இவருக்கும், குள்ளஞ்சாவடி அடுத்த அகரத்தைச் சேர்ந்த தனுஷ்கோடி,31; என்பவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது.
கடந்த, 24ம் தேதி, இரவு கணவர் வீட்டில் இருந்த ரோஷினி துாக்கில் சடலமாக தொங்கிய நிலையில் குடும்பத்தினர் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.
தனது மகளை வரதட்சணை கேட்டு தனுஷ்கோடி, மாமியார் சுமதி துன்புறுத்தியதால் ரோஷினி தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய் கவிதா குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் வரதட்சணையால் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரிக்க ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
மேலும்
-
பஹல்காம் விவகாரம் தேவகவுடா ஆதரவு
-
ரேணுகாதேவி கோவிலில் 101வது ஆண்டு கரக திருவிழா
-
ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா ஜூலையில் மெட்ரோ ரயில்
-
'ட்ரோன்' உற்பத்தி நிறுவன தரவு திருட்டு? எஸ்.ஐ.டி., அமைத்தது உயர் நீதிமன்றம்!
-
57 முறை டிரான்ஸ்பர் ஆன ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா இன்று பணி ஓய்வு
-
பாக். வான்வெளி மூடல் எதிரொலி: 5 நாட்களில் திருப்பி விடப்பட்ட 600 விமானங்கள்