கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வு அறை கட்ட திட்டம்; வாரிய நிதி ரூ.20.50 கோடி ஒதுக்கீடு
சிவகங்கை: தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.40 லட்சம் செலவில் ஓய்வு அறை கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் 54 வகையான கட்டுமான பணிகளில் லட்சக்கணக்கான ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இந்த ஊழியர்கள் அன்றாடம் காலை ஒரு இடத்தில் கூடி, பணிகள் கிடைத்ததும் அக்கட்டட பணிகளுக்கு சென்று வருவர். ஒரே இடத்தில் கூடும் வகையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வு அறை கட்டும் நோக்கில், அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மாநகராட்சி, நகராட்சி மூலம் இருக்கைகள், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கட்டிக்கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. குழந்தைகளுக்கு பாலுாட்டும் அறையும் அமைய உள்ளது.
தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கட்டுமான தொழிலாளர் நல வாரிய நிதியில் இருந்து தலா ரூ.40 லட்சம் செலவில் ஓய்வு அறை கட்ட முதற்கட்டமாக ரூ.20.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறை மாநகராட்சி, நகராட்சிகள் மூலம் கட்ட முடிவு செய்துள்ளோம். இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது என்றார்.
மேலும்
-
தே.மு.தி.க. பொறுப்புகளில் திடீர் மாற்றம்: பெயர் மாறி இளைஞரணி செயலாளரான விஜய பிரபாகர்
-
சரக்குகளை விரைந்து கையாளும் திட்டம்; ஓசூர், மதுரையில் செயல்படுத்த ஆய்வு
-
எண்கள் சொல்லும் செய்தி
-
'பேட்டியா கண்காட்சி' மே 2ம் தேதி துவக்கம்
-
மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 33 மாதங்களில் இல்லாத உயர்வு
-
சுய ஒழுக்கம், கட்டுப்பாடு முக்கியம்; தொண்டர்களுக்கு விஜய் கண்டிப்பு