மாயமான கள்ளக்காதல் ஜோடி அழுகிய நிலையில் ஏரியில் மீட்பு

கலசப்பாக்கம்: மாயமான கள்ளக்காதல் ஜோடி, அழுகிய நிலையில் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் அடுத்த நார்த்தாம்பூண்டி ஏரியில் தண்ணீர் குறைந்துள்ளதால், மீன் பிடிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், நேற்று முன்தினம் மாலை சென்றனர். அப்போது, அழுகிய நிலையில் இரு சடலங்கள் கிடந்தன. கலசப்பாக்கம் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியோடு சடலங்களை மீட்டனர்.

விசாரணையில், நார்த்தாம்பூண்டியை சேர்ந்த கீதா, 40, வட புழுதியூர் முருகன், 43, என்பது தெரிந்தது. உறவினரான இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு, மூன்று மாதங்களுக்கு முன் மாயமானது தெரிந்தது. கீதாவுக்கு கணவர், இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். முருகனுக்கு மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர்.

இவர்கள் கொலை செய்து ஏரியில் வீசப்பட்டனரா அல்லது ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement