ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 600 கிலோ குட்கா பறிமுதல்

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட, 600 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உளுந்துார்பேட்டை தாலுகா, எடைக்கல் சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் ஆசனுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த வாகனத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

போலீசார், டிரைவரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, விசாரணையில் டிரைவர் தர்மபுரியை சேர்ந்த மணிகண்டன், 35; என தெரிந்தது. மேலும் குட்காவை ஆந்திர மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு கடத்திச் சென்றது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மணிகண்டனை கைது செய்த போலீசார், வாகனம் மற்றும் 600 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement