சிறுமிக்கு தொந்தரவு: முதியவருக்கு குண்டாஸ்

கடலுார்; சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சீர்காழி, கண்ணன் குளத்தைச் சேர்ந்தவர் முருகேசன்,58; இவர், கடந்த 14ம் தேதி கடலுாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்த போது, 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில், அவரை கைது செய்தனர்.
இவரின் குற்றச் செயலை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரைப்படி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், முருகேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, கடலுார் மத்திய சிறையில் உள்ள முருகேசனிடம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கி கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தே.மு.தி.க. பொறுப்புகளில் திடீர் மாற்றம்: பெயர் மாறி இளைஞரணி செயலாளரான விஜய பிரபாகர்
-
சரக்குகளை விரைந்து கையாளும் திட்டம்; ஓசூர், மதுரையில் செயல்படுத்த ஆய்வு
-
எண்கள் சொல்லும் செய்தி
-
'பேட்டியா கண்காட்சி' மே 2ம் தேதி துவக்கம்
-
மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 33 மாதங்களில் இல்லாத உயர்வு
-
சுய ஒழுக்கம், கட்டுப்பாடு முக்கியம்; தொண்டர்களுக்கு விஜய் கண்டிப்பு
Advertisement
Advertisement