சர்ச்சில் பைபிள் ஆசிரியரை வெட்டிய போதை கும்பல்

தெர்மல்நகர்: துாத்துக்குடி, தெர்மல்நகர் கேம்ப்-1 பகுதியில் உள்ள புனித அந்தோணியார் சர்ச்சில், சாயர்புரம் அருகே நடுவக்குறிச்சியை சேர்ந்த சாமுவேல் அந்தோணிராஜ், 53, பணியாளராக வேலைபார்த்து வருகிறார்.
நேற்று, ஊரணி ஒத்தவீடு பகுதியை சேர்ந்த, 16 வயது சிறார் ஒருவர் பைபிள் வகுப்புக்கு சென்றுள்ளார். அப்போது அவர் புகையிலை பொருளை பயன்படுத்தியுள்ளார். இதில், போதையில் நிலைதடுமாறிய அவரை சாமுவேல் அந்தோணிராஜ் கண்டித்ததால், அந்த சிறுவன் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சிறிது நேரத்தில் நண்பர்கள் நால்வருடன் வந்த சிறுவன், சாமுவேல் அந்தோணிராஜிடம் தகராறு செய்துள்ளார். அனைவரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில், முகமது, 20, என்ற வாலிபர் திடீரென சாமுவேல் அந்தோணிராஜின் தலையில் வெட்டியுள்ளார்.
தெர்மல்நகர் போலீசார் முகமதுவை கைது செய்தனர். தப்பிய மற்றவர்களை தேடுகின்றனர்.
மேலும்
-
தே.மு.தி.க. பொறுப்புகளில் திடீர் மாற்றம்: பெயர் மாறி இளைஞரணி செயலாளரான விஜய பிரபாகர்
-
சரக்குகளை விரைந்து கையாளும் திட்டம்; ஓசூர், மதுரையில் செயல்படுத்த ஆய்வு
-
எண்கள் சொல்லும் செய்தி
-
'பேட்டியா கண்காட்சி' மே 2ம் தேதி துவக்கம்
-
மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 33 மாதங்களில் இல்லாத உயர்வு
-
சுய ஒழுக்கம், கட்டுப்பாடு முக்கியம்; தொண்டர்களுக்கு விஜய் கண்டிப்பு