காங்., - எம்.எல்.ஏ., மனைவிக்கு புதிய பதவி

பாகல்கோட்: ஹுன்குந்த் காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர் மனைவி வீணா, அகில இந்திய வீரசைவ மஹா சபா மகளிர் பிரிவு தேசிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகல்கோட் மாவட்டம், ஹுன்குந்த் காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர். இவரது மனைவி வீணா. இவரை அகில இந்திய வீரசைவ மஹாசபா மகளிர் பிரிவு தேசிய தலைவராக நியமித்து, தலைவர் சாமனுார் சிவசங்கரப்பா உத்தரவிட்டுள்ளார். இந்த மஹாசபை, லிங்காயத் மக்களுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டது.
ஒவ்வொரு தேர்தலிலும் எந்த கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும், முக்கிய சக்தியாக லிங்காயத் சமூக ஓட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வரும் நாட்களில், தேர்தலில் வெற்றி பெற வீணாவின் உதவியை, காங்கிரஸ் தலைவர்கள் நாடுவர்.
பஞ்சமசாலி சமூகத்திற்கு '2ஏ' இடஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில், பல போராட்டங்களை முன்நின்று அவர் நடத்தி உள்ளார். காங்கிரசின் மகளிர் அணியிலும் பொறுப்பு வகித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பாகல்கோட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட முயற்சி செய்தார். ஆனால் சர்க்கரை துறை அமைச்சர் சிவானந்த் பாட்டீல் மகள் சம்யுக்தாவுக்கு, காங்கிரஸ் மேலிடம் சீட் கொடுத்தது.
தனக்கு வாய்ப்பு கிடைக்காததால், வீணா கண்ணீர் விட்டார். பின், கட்சி தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருக்கிறார்.
மேலும்
-
தமிழகத்தில் இருந்து கடத்தல்; ரூ.9.6 கோடி கஞ்சாவை பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை
-
தே.மு.தி.க. பொறுப்புகளில் திடீர் மாற்றம்: பெயர் மாறி இளைஞரணி செயலாளரான விஜய பிரபாகர்
-
சரக்குகளை விரைந்து கையாளும் திட்டம்; ஓசூர், மதுரையில் செயல்படுத்த ஆய்வு
-
எண்கள் சொல்லும் செய்தி
-
'பேட்டியா கண்காட்சி' மே 2ம் தேதி துவக்கம்
-
மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 33 மாதங்களில் இல்லாத உயர்வு