மோடியுடன் நிற்கிறோம் எம்.பி.பாட்டீல் தடாலடி

விஜயபுரா: ''இந்திரா போன்று பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, மாநில தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.

விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:



பாகிஸ்தானுடன் போர் வேண்டாம் என்று முதல்வர் சித்தராமையா தெரிவிக்கவில்லை. அதே வேளையில், போரினால் எதற்கும் தீர்வு கிடைக்காது என்ற அர்த்தத்தில் பேசினார்.

இந்தியா மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ள பாகிஸ்தான் தண்டிக்கப்பட வேண்டும். எனவே, பாகிஸ்தான் மீது இந்திரா மேற்கொண்ட நடவடிக்கை போன்று, பிரதமர் மோடியும் மேற்கொள்ள வேண்டும். அவருடன் அனைத்து கட்சியினரும் துணை இருப்போம்.

நேற்று முன்தினம் பெலகாவியில் மத்திய அரசின் விலை உயர்வை கண்டித்து நடந்த காங்கிரஸ் போராட்டத்தில், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று பா.ஜ., நினைக்கிறது.

இதுபோன்று நாங்களும் மோடியின் நிகழ்ச்சியில் 50 பேராகவோ அல்லது பெண்களை முன்னிறுத்தி போராட்டம் நடத்தவா? பா.ஜ.,வில் ஆண்களே இல்லையா என்று காங்கிரஸ் தொண்டர்கள் பேசிக் கொண்டது, அவர்களுக்கு தான் வெட்கக்கேடு.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement