தங்கத்தின் தேவை 15 சதவீதம் சரிவு: உலக தங்க கவுன்சில் அறிக்கை:
இந்தியாவில் நடப்பாண்டு மட்டும் தங்கத்தின் விலை, 25 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், 2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், 139 டன்களாக இருந்த தங்கத்தின் தேவை, நடப்பாண்டு இதே காலத்தில், 118.10 டன்களாக குறைந்து, 15 சதவீதம் சரிவு கண்டுள்ளது.
தங்கத்தின் முதலீட்டுத் தேவையானது, முந்தைய ஆண்டு, 43.60 டன்களாக பதிவான நிலையில், நடப்பாண்டு 7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 46.70 டன்களாக அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் ஆபரண தங்கத்திற்கான தேவை, 25 சதவீதம் சரிவு கண்டுள்ளது. அதாவது, 2024 மார்ச் மாதத்துடன் முடிந்த முதல் காலாண்டில், 95.50 டன்னாக இருந்த நிலையில், நடப்பாண்டு, 71.40 டன்னாக குறைந்துக் உள்ளது. இதே காலகட்டத்தில், தங்கம் இறக்குமதி 167.40 டன்னாக அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement