'மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளும்ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்'



நாமக்கல்'மாவட்டத்தில் செயல்படும் அனைத்து விடுதிகளும், ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்டத்தில், பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் அரசு, அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதி, அறக்கட்டளை, சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், கல்லுாரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள், தனியார் நடத்தும் பெண்கள் விடுதி, கல்லுாரிகள் தற்காலிகமாக நடத்தும் விடுதிகள் என, அனைத்தும், ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்து, 'லைசென்ஸ்' பெற, தமிழக அரசின் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து, அதன் நகலை இணைத்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால், விடுதி உரிமையாளர், மேலாளர் ஆகியோருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை, அபராதம் விதித்து, விடுதி லைசென்ஸ் ரத்து
செய்யப்படும்.
விபரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பதிவிற்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement