மறவபாளையத்தில் தடுப்பணை கட்டும்திட்டத்தை கைவிட விவசாயிகள் வலியுறுத்தல் , இத்திட்டத்தை கைவிட வேண்டும். அதை மீறி கட்டுமான பணி நடந்தால், அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு கூறினார். இதுபற்றி ஈரோடு, வெள்ளகோவில் நீர் வளத்துறையிடமும் விவசாயிகள் மனு வழங்கி உள்ளனர்.
ஈரோடு::கீழ்பவானி வாய்க்காலின், 95வது மைலில் அவசர கால வடிகால் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என, விவசாய சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.
இதுபற்றி, கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்க தலைவர் பெரியசாமி கூறியதாவது:பவானிசாகர் அணையில் இருந்து வரும் தண்ணீர் மூலம், பாசனம் பெறும் கீழ்பவானி வாய்க்காலின் கடைமடை
பகுதிகளான திருப்பூர் மாவட்டம் முத்துார், மங்களப்பட்டி, கரூர் மாவட்டம் மொஞ்சனுார், அஞ்சூர் பகுதிகளில் எப்போதும் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.
முழு அளவில் தண்ணீர் திறக்கும்போதும், குறைவாகவே தண்ணீர் சென்றடைந்து, பற்றாக்குறையை எதிர் கொள்வர். இந்நெருக்கடிக்கு இடையே, பிரதான கால்வாயின், 95வது மைலில் உள்ள மறவபாளையத்தில், 1.5 கோடி ரூபாய் செலவில் புதிய வெள்ளநீர் தடுப்பு கதவணை கட்ட நீர் வளத்துறை திட்டமிட்டுள்ளது.
கீழ்பவானியின் பிரதான கால்வாயில், மூன்று இடங்களில் ஏற்கனவே அவசர கால நீர் வெளியேற்றங்கள் உள்ளன. கூடுதலாக கால்வாயின், 89வது மைலில் அவசர கால மதகுகள் உள்ளன. எனவே, 95 வது மைலில் மற்றொரு நீர் வெளியேற்றும் கதவணை தேவையற்றது. இத்திட்டம், ஆயக்கட்டு அல்லாத பிற பகுதி நலனுக்காக கொண்டு வருவதாக சந்தேகிக்கிறோம். அவ்வாறு கதவணை அமைந்தால், கடைமடை பகுதி விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். கடைமடையில் உள்ள, 20 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கும் என்பதால், இத்திட்டத்தை கைவிட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும், 13ல் முத்துார் நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு கூறினார்.மங்களப்பட்டி விவசாய சங்க நிர்வாகி சண்முகராஜ் கூறியதாவது: இதுவரை மைல், 95 முதல், 124 வரை கீழ்பவானி பிரதான கால்வாயில் எந்த உடைப்பும் ஏற்பட்டதில்லை. எனவே, மறவபாளையத்தில் ஆயக்கட்டு அல்லாத விவசாயிகளுக்கு, தண்ணீர் கொண்டு செல்லும் நோக்கில், இத்திட்டம் கொண்டு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம். இத்திட்ட நீரை குளத்தில் நிரப்பி, அங்கிருந்து ஆயக்கட்டு அல்லாத நிலங்களுக்கு பம்பு மூலம் தண்ணீர் கொண்டு செல்லவும் வாய்ப்புள்ளது. எனவே