வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்; அதிபர் டிரம்ப் கணிப்பு

வாஷிங்டன்: ''வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற போதே தங்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார். அடுத்தடுத்து சீனாவுக்கு வரி மேல் வரி போட்டார். இதையடுத்து பதிலுக்கு வரி சீனாவும் வரி விதித்தது. சீன பொருட்களுக்கு இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக டிரம்ப் அறிவித்தார். இது இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போரை அதிகரித்தது.
இந்நிலையில், ''வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து டிரம்ப் கூறியதாவது: பொருளாதாரத்தில் மந்த நிலை நிலவுகிறது. இதனால் வரி விதிப்பது அவசியம் ஆகிறது. பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் ஜோ பைடன் தான் காரணம். நமது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இதற்கு சிறுது நேரம் ஆகும்.
அமெரிக்கா சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை சார்ந்து இல்லை.அமெரிக்க குழந்தைகளுக்கு 30 பொம்மைகளுக்கு பதிலாக இரண்டு பொம்மைகள் கிடைக்கக் கூடும். இரண்டு பொம்மைகளும் வழக்கத்தை விட இரண்டு டாலர்கள் அதிகமாக இருக்கலாம். ஆனால், வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.








மேலும்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு; விசாரிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு
-
தென் கொரியாவின் தற்காலிக அதிபர் ஹான் டக்-சூ ராஜினாமா
-
மோடி ஜம்மு-காஷ்மீருக்கு அமைதியைக் கொண்டுவருவார்: வேவ்ஸ் மாநாட்டில் ரஜினி பேச்சு
-
சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம்!
-
லஷ்கர்-இ-தொய்பா தலைவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பாகிஸ்தான்!
-
கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!