'சைபர் கொள்ளையை தடுக்க அரசு சட்டம் கொண்டு வரணும் '
கோவை : அப்பாவி மக்களை ஏமாற்றி, இணைய வழியில் கொள்ளையடிக்கும் சைபர் கொள்ளையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈசுவரன் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
தினசரி ஆயிரக்கணக்கான மக்கள், சைபர் குற்றவாளிகளிடம் சிக்கி, பணத்தை இழக்கின்றனர். விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், ஏழை, எளிய மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இதில் இழக்கும் சூழல் உள்ளது.
தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே உள்ளன. இதைக்கட்டுப்படுத்த போதுமான சட்ட திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். சைபர் கொள்ளையில் ஈடுபடும் நபர்களை கைது செய்து, கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
-
கிருமிகளைக் கொல்லும் பூச்சு
Advertisement
Advertisement