இந்த நிலை மாறுமா?

ராஜன், சூளேஸ்வரன்பட்டி: மயானங்கள், சுத்தமாகவும், பசுமையாகவும் இருந்தால், துக்கத்துடன் வரும் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதலும், அமைதியையும் ஏற்படும். மயானங்கள் சுத்தமாக இல்லையெனில், அங்கு சுகாதாரமற்ற நிலையும், தொற்றுநோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது. மயானங்களைப் பராமரிப்பதன் வாயிலாக, இறுதிச் சடங்குகளைச் செய்யும் போது, சிரமங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் முடியும். அங்கு அமர்வதற்கு தேவையான கொட்டகைகள், நிழல் தரும் மரங்கள், பூச்செடிகள் நடவு செய்ய உள்ளாட்சி நிர்வாகங்கள் முனைப்பு காட்ட வேண்டும்.
ஜெயன், சமூக ஆர்வலர்: வால்பாறை நகரில் உள்ள ஹிந்துக்களுக்கான மயானத்தில் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. சில நேரங்களில், பழைய குழிகளிலேயே உடலை அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், மயானத்தை விரிவுபடுத்த வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள மின்மயான திட்டத்தை செயல்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூர்த்தி, கணக்கம்பாளையம், உடுமலை: மயானம் இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு அப்பகுதிகள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மயானத்துக்கு செல்லும் வாகனங்கள் திரும்ப முடியாத நிலையில், இடவசதி இல்லாமல் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் இதுகுறித்து கண்டுகொள்வதில்லை. மயானத்தை சுத்தப்படுத்தி, மனதுக்கு அமைதி ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.
ராஜா, எஸ்.வி.புரம், உடுமலை: கிராமங்களில் உள்ள மயானங்களில் காத்திருப்போர் கூடம் உட்பட அடிப்படை கட்டமைப்புகள் எதுவும் பராமரிக்கப்படுவதில்லை. மாலை நேரங்களில் மயானங்களை பயன்படுத்தவே முடியாத நிலையில் தான் உள்ளது. இருள் சூழ்ந்தும், விஷப்பூச்சிகள் அதிகரித்தும் புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரத்தில், 'குடி'மகன்களின் கூடாரமாக மயானங்கள் மாறி விடுகின்றன. இந்த நிலை மாற வேண்டும்.
மேலும்
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
-
கிருமிகளைக் கொல்லும் பூச்சு