கார் மோதி இளைஞர் பலி; அவிநாசி அருகே சோகம்

அவிநாசி : அவிநாசி அருகே அதிவேகமாக சென்ற கார் மோதியதில் டூவீலரில் சென்ற இளைஞர் பரிதாபமாக பலியானார்.

திருப்பூர், ஆத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 24. தனியார் கார் நிறுவன விற்பனை பிரிவில் பணியாற்றி வந்தார். மனைவி மற்றும் குழந்தை உள்ளனர்.

நேற்று அவிநாசி அருகே வஞ்சிபாளையத்தில் உள்ள ஒரு வாடிக்கையாளரை சந்திக்க தனது டூவீலரில் சென்றார். அதில், வஞ்சிபாளையம் பகுதியில் இருந்து அவிநாசி செல்லும் பிரதான ரோட்டில் திருப்பூர் நோக்கி அதிவேகமாக சென்ற கார் அதிவேகமாக ஸ்ரீராம் சென்ற டூவீலர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமுருகன்பூண்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான ஸ்ரீராமுக்கு, பவித்ரா, 24 என்ற மனைவியும், நான்கு வயதில் குழந்தையும் உள்ளனர்.

போலீசார் கூறுகையில், 'காரை அதிவேகமாக ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதாக நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்த மதிவாணன் என்ற இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரிக்கிறோம்,' என்றனர்.

Advertisement