வடக்கு அலுவலகம் தடுமாற்றம்; ஒரேயொரு ஆய்வாளர் இருந்தால் போதுமா? ஆர்.டி.ஓ., இல்லை; தாமதமாகும் பணிகள்

திருப்பூர்: திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆர்.டி.ஓ., இல்லாமல், ஒன்றரை மாதமாக தடுமாறி வருகிறது. ஒரே ஆய்வாளர் மட்டும் பணியில் உள்ளதால், பணிகள் தாமதமாகின்றன.
திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றி வந்த ஜெயதேவராஜ், தர்மபுரி ஆர்.டி.ஓ.,வாக பணி மாறுதல் பெற்று, மார்ச் மாதம் சென்றார். ஆய்வாளர் பணியில் இருந்த பாஸ்கர் பணி உயர்வு பெற்று, உடுமலை ஆர்.டி.ஓ.,வாக பொறுப்பேற்றார். மற்றொரு ஆய்வாளர் உடல்நிலை காரணமாக தொடர் விடுப்பில் உள்ளார்.
பணி முடிக்க2, 3 நாளாகிறது
ஆர்.டி.ஓ., - மூன்று ஆய்வாளருடன் செயல்பட்டு வந்த வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்போது ஒரு ஆய்வாளர் மட்டுமே உள்ளார். தெற்கு ஆர்.டி.ஓ., வெங்கிடுபதிக்கு கூடுதல் பொறுப்பாக வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது. இருக்கும் ஒரு ஆய்வாளருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ள நிலையில், வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தை நாடி வருவோருக்கு நடவடிக்கைகளை முடித்துக் கொடுத்து அனுப்பி வைக்க, இரண்டு முதல் மூன்று நாட்களாகிறது.
கண்காணிப்பு சிக்கல்
ஒரே ஆய்வாளரே புதிய வாகன பதிவு எண் வழங்குவது, அலுவலக கோப்புகளை பார்வையிடுவது மற்றும் வாகன பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பொறுப்பு ஆர்.டி.ஓ., வெங்கிடுபதி வாரம் இருமுறை மட்டுமே வருவதால், பிற அலுவலர், ஊழியர் பணிகளை கண்காணிக்க இயலவில்லை.
காலியிடம் நிரப்பப்படுமா?
வட்டார போக்குவரத்து துறையினர் கூறுகையில், 'மாநிலம் முழுதும் காலியாக உள்ள ஆர்.டி.ஓ., ஆய்வாளர் பணியிடங்கள் குறித்த பட்டியலில் இருமுறை திருப்பூரின் விபரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் இடங்கள் நிரப்பப்படும் போது, திருப்பூருக்கான இடமும் நிரப்ப வாய்ப்புள்ளது,' என்றனர்.
மேலும்
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
-
கிருமிகளைக் கொல்லும் பூச்சு