தாயனூரில் கண் சிகிச்சை பரிசோதனை முகாம்

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் காரமடை அருகே தாயனூரில், தனியார் திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சித்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையுடன், கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து, இலவச கண் பரிசோதனை முகாமினை நடத்தியது.

ஊரக வளர்ச்சித் துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், மகேஸ்வரி மற்றும் காரமடை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுதாகர் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர்.

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து கண் மருத்துவ குழுவினர் வருகை தந்து, முகாமில் கலந்து கொண்ட மக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.

இதில், கண் மருத்துவ உதவியாளர் விஜயகுமாரி, மருத்துவர்களால் கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட 22 நபர்களை, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

----

Advertisement