மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா துவக்கம்

அன்னுார்: அன்னுார், மாரியம்மன் கோவில், 35ம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. மாலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடந்தது.

பால், தயிர், பன்னீர், சந்தனம், நெய் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் மாரியம்மனுக்கு அபிஷேக பூஜை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். விழா கமிட்டி உறுப்பினர்கள், பக்தர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அன்னதானம் வழங்கப்பட்டது. வருகிற 5ம் தேதி வரை தினமும் இரவு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. வருகிற 6ம் தேதி காலை கணபதி ஹோமமும், மாலையில் கம்பம் நடுதலும், பூவோடு எடுத்தலும் நடைபெறுகிறது. 9ம் தேதி மாலை திருவிளக்கு பூஜையும், 11ம் தேதி மாலை ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

Advertisement