இளம் பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை

கூடலுார் : கூடலுார் தேவர்சோலை அருகே, இளம் பெண் இறந்தது தொடர்பாக ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

கேரளா, காளிகாவு சேர்ந்த முபாரக் என்பவருக்கும், மசினகுடியை சேர்ந்த சபிகா,19, என்பவருக்கும் ஆறு மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. முபாரக் வெளிநாடு சென்றுவிட்டார். சபிகா, அவர் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன், சாபிகா தேவர்சோலை, 3 - டிவிஷன் பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து தங்கி உள்ளார். இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக நேற்று முன்தினம், இரவு வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தேவர்சோலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டர். திருமணம் ஆகி ஆறு மாதம் ஆவதால், கூடலுார் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Advertisement