புதுச்சேரி முழுவதும் சட்ட விரோத பேனர்கள் அமைச்சர், எதிர்கட்சி தலைவருக்கு சமூக பொறுப்பு வேண்டாமா? 

புதுச்சேரி: எதிர்கட்சி தலைவர் சிவா ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனர்களையும், அமைச்சர் சாய் சரவணன்குமார் வைத்துள்ள பேனர்களையும் உடனடியாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி தி.மு.க., அமைப்பாளர் சிவா, கடந்த 29ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரியின் அனைத்து பகுதிகளிலும் அவரது ஆதரவாளர்கள் பேனர்களை வைத்துள்ளனர்.

முக்கிய சிக்னல்களிலும், நகரின் பிரதான இடங்களிலும் 50 அடி, 100 அடி என ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் சாய் சரவணன்குமாரும், பிரதான சிக்னல்களில் பிரமாண்ட பேனர்களை வைத்துள்ளனர்.

போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும் வைக்கப்பட்டுள்ள இந்த சட்ட விரோத பேனர்களால் விபத்து அபாயம் எழுந்துள்ளது. இந்த பேனர்களை பார்த்து பொதுமக்களும் எரிச்சல் அடைக்கின்றனர்.

பொதுமக்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டிய, மக்கள் பிரதிநிதியான எதிர்கட்சி தலைவர் சிவா தனது ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனர்களை வேடிக்கை பார்க்கலாமா?

அரசின் அங்கமாக, அமைச்சராக பதவி வகிக்கும் மக்கள் பிரதிநிதியான சாய்சரவணன்குமார், சட்டத்துக்கு விரோதமாக பேனர்களை வைக்கலாமா? சமூக பொறுப்பு வேண்டாமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வில்லியனுார் கொம்யூன் அதிகாரிகள் கொர்...



நீதிமன்றம் தலையிட்ட பிறகே, புதுச்சேரியில் சட்ட விரோதமாக பேனர்கள் வைப்பது கட்டுக்குள் வந்துள்ளது. சட்ட விரோத பேனர்கள் அகற்றப்படுவதுடன், வழக்கும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இருந்தபோதும், வில்லியனுார் பகுதியில் மட்டும் பேனர் கலாசாரம் ஒழியவில்லை. இதற்கு, பேனர் தடை சட்டத்தை வில்லியனுாரில் உள்ள அதிகாரிகள் மதிக்காததே காரணம். இதனால், காது குத்து, கல்யாணம், பிறந்த நாள் என எல்லாவற்றிற்கும் கும்பல் கும்பலாக பேனர்களை துாக்கி வந்து, சாலையில் பார்க்கும் இடத்தில் எல்லாம் வைக்கின்றனர்.

சட்ட விரோத பேனர் கலாசாரத்தால் கோவில் நகரான வில்லியனுாரின் அழகே சீர்குலைந்து விட்டது. விபத்துகளும் நடந்து வருகிறது. ஆனால், பேனர் வைத்துள்ளவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

வில்லியனுார் போலீசார், கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், பொதுப்பணித்துறையின் நெடுஞ்சாலை கோட்ட அதிகாரிகள் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் பணியில் உள்ளனர். சட்ட விரோத பேனர்கள் வைத்துள்ளவர்களுக்கு விசுவாசமாக சாமரம் வீசி வருகின்றனர்.

சட்ட விரோத பேனர்கள் வைக்கப்பட்டுள்ள சாலை வழியாக தான் அனைத்து உயரதிகாரிகளும் தங்களுடைய அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர். சட்ட விரோத பேனர்கள், அதிகாரிகளின் கண்ணுக்கு தெரியவில்லையா? ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

புதுச்சேரிக்குள் தான் வில்லியனுார் இருக்கிறது. அப்படி இருக்கும்போது பேனர் தடை வில்லியனுாருக்கு மட்டும் பொருந்தாதா? இங்குள்ள சட்ட விரோத பேனர்களை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவது ஏன்?

சட்டத்தைவிட பெரியவர்கள் யாரும் இல்லை. சட்ட விரோத பேனர்களை அகற்றாவிட்டால், அதிகாரிகள் தான் கோர்ட் படிக்கட்டுகளில் ஏறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

உடனடியாக, வில்லியனுாரின் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை, கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து அகற்ற வேண்டும்.

Advertisement