பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
வால்பாறை : வால்பாறை பா.ஜ., மண்டல் பொதுச்செயலாளர்களாக சுனில், முகேஸ், துணைத்தலைவர்களாக ரமேஷ், சஞ்சிவீராஜ், கலாராணி, உமாகுட்டி, கிருஷ்ணன், விஜயன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதே போல், செயலாளர்களாக ராஜ்குமார், சுரேஷ்குமார், பொருளாளராக கற்பகவிநாயகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம், வால்பாறை பா.ஜ., மண்டல் தலைவர் செந்தில்முருகன் தலைமையில் நடந்தது. மண்டல் பார்வையாளர் தங்கவேல் வரவேற்றார்.
கூட்டத்தில்,மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை மக்களிடையே சென்றடையும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சட்டசபை தேர்தலுக்கான பணிகளை இப்போதே துவங்கி, விறுவிறுப்புடன் செயல்பட வேண்டும்.
கட்சியை மேலும் பலப்படுத்தும் வகையில், புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன், முன்னாள் மண்டல் தலைவர் பாலாஜி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கனகவள்ளி உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்; அதிபர் டிரம்ப் கணிப்பு