அனைத்து பிரச்னைகளுக்கும் யோகாவில் தீர்வு இனி ஒவ்வொரு வாரமும் யோகாவை கற்று தெளிவோம்

புதுச்சேரி: நமது முன்னோர்கள் உலகிற்கு அளித்த மிக முக்கிய கொடைகளில் ஒன்று யோகா.. இன்றைய அவசர உலகில் அனைத்து பிரச்னைகளுக்கும் யோகாவில் தீர்வுகள் புதையுண்டு கிடக்கிறது. இந்த உண்மை உணர்ந்து தான் மேலைநாடுகளிலும் கூட யோகா செய்ய இப்போது ஆர்வம் காட்டுகின்றனர்.

யோகா செய்யும்போது நம் உடல், மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவை ஒன்றிணைந்து மன அழுத்தங்களை குறைத்து மனதில் அமைதி நிலவச் செய்கிறது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முதல் உணர்ச்சி, நல்வாழ்வை மேம்படுத்துவது வரை மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும், யோகாவால், பண்பட்ட சமூதாயத்தையும் உருவாக்க முடியும்.

எனவே, இனி ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் வெளிவரும் 'தினமலர்' நாளிதழின் விளையாட்டு பகுதியில் யோக நெறிமுறைகள் வெளியாக உள்ளது.

இப்பகுதியில்யோகாச்சாரியா டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி நம் அன்றாட வாழ்விற்கு பலனளிக்க கூடிய ரிஷி கலாசார அஷ்டாங்க யோகாவின் அடிப்படை ஹதயோ பயிற்சிகளை அறிமுகப்படுத்த உள்ளார்.

இவர் உலகப்புகழ் பெற்ற யோக மகரிஷி சுவாமி கீதானந்த கிரி குரு மகாராஜிற்கு பின் கம்பளி சுவாமி மடத்திற்கு மடாதிபதியாக பொறுப்பேற்று வேதம், கலாசாரம், ரிஷி கலாசார அஷ்டாங்க யோகத்தை இளைய சமூதாயத்திற்கு பயிற்றுவித்து உலகம் முழுவதும் கொண்டு சென்று வருகின்றார்.

டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி கூறுகையில், 'இந்த யோக வழியை பின்பற்றுதலின்மன அமைதி, உடல், மனம், உணர்வுகளில் கட்டுப்பாடு, இருக்கமான அல்லது அழுத்தமான சூழல்களிலும் சமநிலையுடன் இருப்பதை எளிதாக கற்றுக்கொண்டு நம்மை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.மேன்மையான, முழுமையான அனைத்துறைகளிலும் சிறந்த விளங்க கூடியவர்களாக இந்த யோக முறை கற்பவர்களை மாற்றும்.

சுவாமி கீதானந்த கிரியால் இயற்றப்பட்ட ரிஷி கலாசார பாரம்பரிய முறையில் விளக்கப்பட உள்ள யோக வழிமுறைகளை உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். இதனை சிறப்பான முறையில் பயிற்சி செய்பவர்கள் அனைத்து துறைகளிலும் மேன்மை பெற ஏதுவாக இருக்கும்' என்றார்.

இனி வாங்க.. ஒவ்வொரு வாரமும் யோக நுணுக்கங்களை பயிற்சி பெற்று தெளிவோம்.

Advertisement