விளையாட்டு போட்டி பரிசளிப்பு

பாகூர்: சேலியமேடு கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆண்டு விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.

பாகூர் அடுத்துள்ள சேலியமேடு கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளியில், 2024-25ம் ஆண்டிற்கான ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். ஆசிரியர்கள் வெரோனஸ் விஜயலட்சுமி, செல்வகுமரன், கணேசன், சித்திரைச்செல்வி, சரவணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

ஆசிரியர்கள் செந்தில்முருகன், பெருமாள், செந்தில்குமார், சுந்தரி, புஷ்பலிங்கம் ஆகியோர் பாராட்டி பேசினார். உடற்கல்வி ஆசிரியர் தணிகைகுமரன் நன்றி கூறினார்.

Advertisement