மாணவர்களுக்கு பரிசளிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு, விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்குனரகம் சார்பில் பள்ளிகளுக்கான தடகளப் போட்டிகள் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனம் ஆகிய பகுதிகளில் 8 மண்டலங்களாக நடத்தப்பட்டன. இதில் ஓட்டப்பந்தயம், கால்பந்து, கூடைப்பந்து, ரோலர் ஸ்கேட்டிங், பளு தூக்குதல், கேரம், சதுரங்கம், ஹாக்கி, கோகோ, கபடி, பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ், யோகாசனம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் இரு நாட்கள் நடந்தது.தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில், அரசு கொறடா ஆறுமுகம், அரசு செயலர் சுந்தரேசன், விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்குனரக அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement