முதல்வருடன்  நேரில் சந்திப்பு 

விழுப்புரம்: தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் நன்றி தெரிவித்தார்.

கண்டமங்கலத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என விழுப்புரம் எம்.எல்.ஏ., லட்சுமணன் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று கண்டமங்கலத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளரான கண்ட மங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் நன்றி தெரிவித்தார்.

சந்திப்பின்போது, துணை முதல்வர் உதயநிதி, ஒன்றிய சேர்மன் ஆர்.எஸ்.வாசன் உடனிருந்தனர்.

Advertisement