சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் சித்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 4ம் தேதி நடக்கிறது.

விழுப்புரம் ரங்காதநாதன் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் பாலசுப்ரமணியர், மணிகண்ட அய்யப்பன், குருதஷ்ணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, கனகதுர்கை அம்மன், கஜலட்சுமி, சரஸ்வதி, ஆஞ்சநேயர், நவக்கிரக சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டு, திருப்பணிகள் நடந்து வந்தது.

இதனையடுத்து, நேற்று காலை 9.00 மணிக்கு கணபதி பஜையும், ஹோமங்களுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இன்று 1ம் தேதி, காலை 10.00 மணிக்கு அக்னி சங்கிரஹண பூஜை, 2ம் தேதி கோ பூஜை, யாகசாலை அலங்காரம், மாலை 6.00 மணிக்கு முதல் கால யாகசாலை பிரவேசம் நடக்கிறது.

வரும் 3ம் தேதி யாக சாலை பூஜைகள் நடக்கிறது. 4ம் தேதி காலை 5.00 மணிக்கு நான்காம் கால யாக பஜனையும், காலை 7.30 மணிக்கு தொடங்கி 9.00 மணிக்குள், கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகமும் நடக்கிறது.

Advertisement