நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு 25 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

உடுமலை : உடுமலை நகராட்சி பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

உடுமலை நகராட்சி பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் குழுவினர், கடைகள் மற்றும் சந்தை வளாகம், ரோட்டோர கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பிளாஸ்டிக் கேரி பேக், முடிச்சு கவர்கள் என, 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரிபேக், முடிச்சு கவர்,பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Advertisement