விழுப்புரம் தங்க மயில் ஜூவல்லரியில் குவிந்த வாடிக்கையாளர்கள்

1

விழுப்புரம்: அட்சய திருதியை முன்னிட்டு விழுப்புரம் தங்கமயில் ஜூவல்லரி சிறப்பு விற்பனையில் நகைகள் வாங்க வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம் தமிழகம் முழுவதும் 62 கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. 30 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

அட்சய திருதியை முன்னிட்டு நேற்று சிறப்பு விற்பனை காலை 6.00 மணிக்கு துவங்கியது. நேற்று நகைகள் வாங்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் லட்சுமி குபேர பூஜை செய்து நகை தரப்பட்டது.

அட்சய திருதியையொட்டி, விழுப்புரம் தங்கமயிலில் தங்க நகைகள் வாங்க ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்தனர். அட்சய திருதியை யொட்டி, விழுப்புரம் தங்கமயில் ஜூவல்லரியில் ஒவ்வொரு கிராம் தங்கத்திற்கும் ரூ. 200 முதல் ரூ. 400 வரை தள்ளுபடி அளிக்கப்பட்டது. ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் வாங்கும் வெள்ளி, வெள்ளி நகைகள் மற்றும் பரிசு பொருட்களுக்கு ரூ. 2,500 முதல் ரூ.10 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டது.

மேலும், வைரம் ஒரு காரட்டிற்கு ஒரு கிராம் முதல் 3 கிராம் வரை தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

Advertisement