கிரைம் கார்னர்
சீண்டல் வாலிபர்கள் கைது
பெங்களூரு பனசங்கரியை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர், கடந்த 23ம் தேதி தன் 15, 16 வயது மகள்களுடன் ஆட்டோவில் சென்றார். ஆட்டோவை பின்தொடர்ந்து பைக்கில் இரு வாலிபர்கள் வந்தனர். திடீரென ஆட்டோவில் குறுக்கே பைக்கை நிறுத்தினர். பைக்கில் இருந்து இறங்கி இரண்டு சிறுமியருக்கும் பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பினர். இதுபற்றி சிறுமியரின் தாய் அளித்த புகாரில், பனசங்கரியின் முபாரக், 23, ஹபீப், 22, ஆகிய இருவரை குமாரசாமி லே - அவுட் போலீசார் கைது செய்தனர்.
=========
இருவருக்கு 'ஆயுள்'
ஷிவமொக்காவின் ஒசநகர் கார்த்திகெரே கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் ஷெட்டி. கட்டட தொழிலாளி. இவரது நண்பர்கள் பயாஸ், கிருஷ்ணா. மூன்று பெரும் ஒன்றாக வேலை செய்தனர். வேலை செய்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், 2021ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி சதீஷ் ஷெட்டியை, நண்பர்கள் இருவரும் கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு ஷிவமொக்கா 5வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி பிரபாவதி நேற்று தீர்ப்பு கூறினார். குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 10,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
***
மேலும்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
-
கிருமிகளைக் கொல்லும் பூச்சு
-
உயர் ரத்த அழுத்தம் குறைய