ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி

உளுந்துார்பேட்டை: உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி.,யை கண்டித்து, வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சமீபத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட, டி.எஸ்.பி., பிரதீப்பை கண்டித்து, கோர்ட் வளாகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாமூல் வசூல் விவகாரத்தில் அவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். மேலும், டோல்கேட் விவகாரத்தில் வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்ததற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதில் சங்க தலைவர் தங்க ரமேஷ் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் பொண் ராவணன் பேசினார். சங்க செயலாளர் கந்தன், பொருளாளர் மணிகண்டன், மூத்த வழக்கறிஞர்கள் பக்கிரிசாமி, வேதகிரி, பச்சையப்பன், முன்னாள் தலைவர் வெங்கடேசன், வழக்கறிஞர்கள் ஆடலரசன், திலீப், ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்; அதிபர் டிரம்ப் கணிப்பு