பன்னர்கட்டா பூங்கா பெயரில் பண மோசடி
பெங்களூரு: பன்னர்கட்டா தேசிய பூங்காவில் சபாரி முன்பதிவு செய்வதில் போலி இணையதளம் மூலம் மோசடி நடந்தது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
பெங்களூரில் உள்ள பிரபலமான பன்னரகட்டா தேசிய பூங்காவில் சபாரி செய்ய இணையதளம் அல்லது நேரில் சென்று பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெறலாம்.
இந்நிலையில், பன்னர்கட்டா பூங்காவின் அதிகாரப்பூர்வ இணையதளம் போன்ற, அச்சு அசலாக போலி இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை. இதனால், பலரும் தங்கள் பணத்தை இழந்து உள்ளனர்.
இது குறித்து சமீபத்தில் பூங்கா நிர்வாகத்திற்கு தெரிந்தது. இந்நிலையில் பூங்கா நிர்வாகத்தின் இயக்குநர் சூர்யா சென் கூறியதாவது:
கடந்த சில நாட்களாக போலியான இணையதளம் மூலம் பெரியவர்களுக்கு 2,000 ரூபாயும், குழந்தைகளுக்கு 1,000 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்து உள்ளது. இந்த போலி இணையதளங்கள் மூலம் பலரும் தங்கள் பணத்தை இழந்து உள்ளனர்.
எனவே, சுற்றுலா பயணியர் 'www.bannerughattabiopark.org' என்ற இணையதளத்திற்கு சென்று மட்டும் பணம் செலுத்தவும். இதை தவிர மற்ற இணைய பக்கங்களுக்கு சென்று கட்டணங்கள் செலுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்; அதிபர் டிரம்ப் கணிப்பு