கட்சி கட்டுப்பாட்டை மீறினால் நடவடிக்கை: த.வெ.க.,வில் ஒழுங்கு நடவடிக்கை குழு

1

சென்னை : கட்சி கட்டுப்பாட்டை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க, த.வெ.க.,வில் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சி தலைமை அறிக்கை:



கட்சி விதிகளின்படி, த.வெ.க., தலைவர் விஜய், தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக செயல்படுவார். பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் உறுப்பினர் சேர்க்கை அணி மாநிலச்செயலர் விஜயலட்சுமி ஆகியோர், தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். த.வெ.க., நிர்வாகிகள், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களுக்கு எதிராக செயல்பட்டால், அவர்கள் மீது இக்குழு நடவடிக்கை எடுக்கும்.

மேலும், நிர்வாக வசதிக்காக, தமிழகத்தில் உள்ள வருவாய் மாவட்டங்கள், மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வடக்கு, மேற்கு, தெற்கு என மூன்று மண்டலம், மத்திய மற்றும் கிழக்கை சேர்த்து ஒரு மண்டலம் என மொத்தம் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் ஒவ்வொன்றுக்கும், ஒரு பெண் உட்பட நான்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement