பெங்களூரில் பக்கிள் ராக் பூங்கா

பெங்களூரில் பசவனகுடி என்றால், அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது புள் டெம்பிள், தொட்ட கணபதி கோவில் தான். ஆனால், இவ்விரு கோவில்களின் பின்புறத்தில், 'பக்கிள் ராக் பூங்கா' இருப்பது பெரும்பாலனோருக்கு தெரியாது. இதை பூங்கா நகரின் 'பாறை தோட்டம்' என்றும் அழைக்கின்றனர்.
இங்குள்ள பாறைகள், கப்பன் பூங்கா, லால்பாக் பூங்காக்களில் உள்ள பாறைகளை விட வித்தியாசமாக உள்ளன. 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்காவுக்குள் சில கோவில்களும் உள்ளன. இங்கு 3,000 ஆண்டுகள் பழமையான, 'பியூகல் ராக்' என்ற பாறை உள்ளது. அடர்த்தியான மரங்களால் இப்பாறைகள் மூடப்பட்டிருக்கின்றன.
பாறைகள் மீது ஏற வசதியாக, படிக்கட்டுகளும் கட்டப்பட்டு உள்ளன. மாலை நேரத்தில் குழந்தைகள் விளையாட சிறந்த இடமாக உள்ளது. இசை நிரூற்றும் உள்ளது. 15 - 16ம் நுாற்றாண்டில் பெங்களூரை நிறுவிய கெம்பேகவுடா ஆட்சி காலத்தில், கட்டப்பட்ட நான்கு காவல் கோபுரங்களில் ஒன்று, பாறை மீது அமைந்து உள்ளது.
எதிரிகள் பெங்களூருக்கு படையெடுத்து வருவதை பார்த்து, நகர மக்களை எச்சரிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. ஊடுருவல்களை மக்களுக்கு தெரிவிக்க, படை வீரர்கள், 'பியூகல்' எனும் போர்களின் போது பயன்படுத்தப்படும் இசைக்கருவி ஊதுவர் என்று நம்பப்படுகிறது.
வார இறுதி நாட்களில், விசேஷ நாட்களில் இங்கு பல இசைக்கலைஞர்கள், கலாசார ஆர்வலர்கள் கச்சேரி நடத்தவும், நாடகம் நடத்தவும் மேடை, சிறிய தியேட்டரும் உள்ளது. இந்த தியேட்டரில் பிரபல கன்னட கவிஞர்கள், குறிப்பாக டி.வி.குண்டப்பா, சர் எம்.விஸ்வேஸ்வரய்யா, மாஸ்தி வெங்கடேஷ் அய்யங்கார் உட்பட பலரின் படங்கள், சுவரில் செதுக்கப்பட்டு உள்ளன.
காதலர்கள் பூங்கா என்றும் கூறலாம். எப்போதும் காதல் ஜோடிகள், தம்பதியர் அமர்ந்திருப்பர். மூத்த குடிமக்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.
பூங்காவுக்குள் களைப்பை போக்க சில சிற்றுண்டி கடைகளும் உள்ளன. தினமும் அதிகாலை 5:00 முதல் 10:00 மணி வரையிலும்; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
... பாக்ஸ் ...
வேண்டியவை, வேண்டாதவை
* அடையாள அட்டை, கேமரா, செல்பி ஸ்டிக், கூலிங்கிளாஸ், கேப், மருந்து மாத்திரைகள், சன்ஸ்கிரீன், பவர் பேங்க் கொண்டு செல்லுங்கள். * மது, ஆயுதம், செல்லப்பிராணிகள், புகையிலை, பிளாஸ்டிக் பேக் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
எப்படி செல்வது?
பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து 4 கி.மீ., தொலைவிலும்; சிவாஜி நகர் பஸ் நிலையத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவிலும் அமைந்து உள்ளது.
பல பகுதிகளில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பசவனகுடி பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ., தொலைவில் பூங்கா அமைந்து உள்ளது. டாக்சி, ஆட்டோ, இரு சக்கர வாகனத்தில் கூட செல்லலாம்
- நமது நிருபர் -.
மேலும்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
-
கிருமிகளைக் கொல்லும் பூச்சு
-
உயர் ரத்த அழுத்தம் குறைய