குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க இணையதளம்

சென்னையில் நேற்று நடந்த, மயிலாப்பூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு இல்லத் திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'தனது மகளுக்கு அனுஷா என்று வேலு பெயர் வைத்துள்ளார். அது தமிழ்ப்பெயர் அல்ல. ஆனால், மணமக்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு, அழகான தமிழ்ப்பெயர் சூட்ட வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தார்.
முதல்வர் பேசும் வீடியோவை, 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்த, நிதன் சிற்றரசு என்பவர், 'குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் வைக்க சரியான சமூக வலைதளங்கள் இல்லை. எனவே, இதற்காக தமிழ் வளர்ச்சித் துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில், வலைதளம் உருவாக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கு தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதில் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், 'குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர், அதற்கான பொருள் அடங்கிய இணையப்பக்கம், தமிழ் இணையக் கல்விக்கழகம் வாயிலாக துவக்கப்படும்' என, அறிவித்துள்ளார்.






மேலும்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
-
கிருமிகளைக் கொல்லும் பூச்சு
-
உயர் ரத்த அழுத்தம் குறைய