புகையிலை விற்பனை ரூ.5.25 லட்சம் அபராதம்

விருதுநகர்: விருதுநகரில் ஜன. 1 முதல் ஏப். 30 வரை கடந்த 4 மாதங்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை மூலம் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

டி.எஸ்.பி., யோகேஷ் குமார், உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் செல்வராஜ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் அம்ஜத் இப்ராஹிம் கான், சிறப்பு எஸ்.ஐ., சரவணன், பெண் போலீஸ் ஷர்மிளா குழுவினர் அபராதம் வசூலித்து கருவூலத்தில் செலுத்தினர்.

2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement