அதிகாரிகள் பங்கேற்காததால் நகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு 

விருதுநகர்: விருதுநகர் நகராட்சிக் கூட்டத்தில் கமிஷனர்உள்ளிட்ட உயர் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

விருதுநகர் நகராட்சியின் சாதாரண, அவசரக் கூட்டம் நகராட்சி தலைவர்மாதவன் தலைமையில் நடந்தது.

விருதுநகரில் கிழக்கு காவல் நிலையம் பொது மக்கள் வசிக்கும் பகுதியில் இல்லாமல் தொலை தூரத்தில் உள்ளது. இதனால் அங்கு யாரும் எளிதில் செல்ல முடிவதில்லை. எனவே அதை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என 14வது வார்டு காங். கவுன்சிலர் ராஜ்குமார் கொண்டு வந்த தீர்மானத்தை பெரும்பாலான கவுன்சிலர்கள் வழி மொழிந்தனர்.

பின் கவுன்சிலர்கள் ஆறுமுகம், முத்துராமன், ஜெயக்குமார், சரவணன் ஆகியோர் கூட்டத்திற்கு கமிஷனர், பொறியாளர் உள்ளிட்ட உயர்அதிகாரிகள் வராததை கண்டித்து கூட்டத்தை ஒத்தி வையுங்கள் என தெரிவித்தனர்.

இதையடுத்து கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக தலைவர் தெரிவித்தார். சாதாரண கூட்டத்தில் 6 தீர்மானங்களும், அவசர கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 31 தீர்மானங்கள் என மொத்தம் 37 தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை.

Advertisement